சொந்த மண்ணில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி !!


Mumbai add to Chennaiyin nightmare
 
Chennai, November 3: Chennaiyin FC’s nightmarish start to their Hero Indian Super League (ISL) title-defence continued as Mumbai City FC inflicted a 1-0 defeat at the Jawaharlal Nehru stadium here on Saturday.
 
Modou Sougou’s third ISL goal of the season (20’) was enough for the Islanders as Chennaiyin slumped to their fifth defeat in six games. Mumbai City, meanwhile, have moved up to the fifth spot with 10 points from six games. 
 
The home team, chasing a much-needed result, started the game brightly. But they could not fashion any noteworthy opportunity in the initial exchanges. Mumbai City also looked out-of-ideas whenever they ventured forth until the 20th minute as the home team’s troubles at the back continued. 
 
Good work from a persistent Rafael Bastos was rewarded when he slid in Sougou through on goal. The striker scuffed his initial shot which was parried back to him by goalkeeper Karanjit Singh in Chennaiyin goal. The Senegalese reacted well and turned the loose ball home. 
 
There was renewed vigour from the home team as they searched for an equaliser. However, the likes of Raphael Augusto and Carlos Salom just could not make an impact in the final third. 
 
Mumbai City also looked comfortable dealing with whatever Chennaiyin threw at them as the home team failed to register even a single shot on target in the first half. 
 
Jorge Costa’s side should have scored the insurance goal early in the second half when Arnold Issoko broke forward before squaring a pass for Sougou whose first touch let him down. 
 
John Gregory responded by sending on Gregory Nelson who infused some much-needed energy into their attacks. 
Around the hour mark, Augusto did well to reach the byline and find Salom with a cut-back. His shot deflected off a defender and came crashing back of the post. But Thoi Singh slammed the rebound against Mumbai custodian Amrinder Singh, much to the disbelief of the home crowd.
 
Nelson, showing some guile, outfoxed a couple of Mumbai defenders before setting Germanpreet Singh up inside the penalty box but the midfielder’s shot was blocked as another chance went begging for Chennaiyin FC. 
 
Despite concerted effort to score an equaliser, the home team’s lack of cutting edge up front ensured Mumbai City would go home with all three points while Chennaiyin are left seeking their first win.
 
 
 
சென்னை, நவம்பர் 3:
 
சென்னையில் இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி 1 – 0  என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது 
 
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 27 ஆவது கால்பந்து போட்டி  சென்னையில்  உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின்   எஃப்சி அணிக்கும் மும்பை  சிட்டி  எஃப்சி அணிக்கும்,  இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை  அணி இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
தொடக்கம் முதல் ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தனர். இதையடுத்து மும்பை அணியும் நன்றாக விளையாடத் தொடங்கியது. இரு அணி வீரர்களும் தங்களது இலக்கை நோக்கி விடிளயாடினர்.
 
ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டம்  சென்னையில் நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
 
ஆனால் சென்னை அணி வீரர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சரியாக விளையாடவில்லை. இதையடுத்து மும்பை அணியை சமன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சென்னை அணி கடுமையாக விளையாடியது.
இறுதியில் 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. ஆனால் அந்த கடைசி நிமிடங்களில் எந்த அணியும் கோல் அடிக்கவிலை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி முன்னிலை பெற்றுள்ளது.
 
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் முன்பைவிட  விறுவிறுப்பாக இருந்தது. இதையடுத்து  ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின்  ஐசக் மற்றும் ஆண்ரியா ஆகியோர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெர்மன் பிரீத்  சிங்கும், கிரிகோரியும் களம் இறங்கினர்.
 
66 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன் சிங் வெளியேற்றப்பட்டு  சஞ்சு பிரதான் களம் இறக்கப்பட்டார்.
 
 72 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லூசியனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து 76 மற்றும் 78 ஆவது நிமிடங்களில் சென்னை மற்றும் மும்பை அணிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 
 
89 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொகமது ரஃபீக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த கடைசி நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து மும்பை  அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.