டெல்லி டைனமோஸ் – ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையான ஆட்டம் டிரா !!


டெல்லி டைனமோஸ் – ஜாம்ஷெட்பூர்  அணிகளுக்கிடையான ஆட்டம் டிரா !!

டெல்லி, நவம்பர் 4:

டெல்லியில்இன்று நடந்த ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில்  டெல்லி டைனமோஸ் அணிக்கும், ஜாம்ஷெட்பூர் அணிக்கும் இடையே நடைபெற்ற லீக் ஆட்டம்  2 – 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 28 ஆவது கால்பந்து போட்டி    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் டெல்லி எஃப்சி அணிக்கும்  ஜாம்ஷெட்பூர் அணிக்கும்   இடையே இன்று நடைபெற்றது. 
ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியது முதல் வீரர்கள் விறுவிறுப்பாக விளையாடினர். இரு தரப்பு வீரர்களும் தொடர்ந்து தடுப்பாட்டத்தை கடைப்பிடித்தனர்.
ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணியின் நாராயன் தாசுக்கு மஞ்சள் அட்டைவழங்கப்பட்டது. ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ அற்புதமாக கோல் அடித்துஅணியை முன்னிலைப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து  கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதையடுத்து  ஜாம்ஷெட்பூர் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியதும் ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மொகமத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் ஜாம்ஷெட்பூர் அணியின் போப்லோ வெளியேற்றப்பட்டு கார்லோஸ் களமிறக்கப்பட்டார்.

இதையடுத்து ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின்  லாலியான்சுலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அடுத்து சிறிது நேரத்தில் அதாவது  58 ஆவது நிமிடத்தில்  டெல்லி அணியின் ஆட்ரியா கார்மோனோ  ஒரு கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் இரு அணிகளிலும் சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில்  ஜாம்ஷெட்பூர் அணியின் ட்ரி ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

ஆட்டநேரம் முடிந்ததும் கூடுதலாக 4 நிமிடங்கள்  வழங்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து டெல்லி டைனமோஸ் அணிக்கும், ஜாம்ஷெட்பூர் அணிக்கும் இடையே நடைபெற்ற  போட்டி 2 – 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.