தமிழ்நாடு பொன்விழா விளையாட்டு போட்டிகள்


தமிழ்நாடு பொன்விழா விளையாட்டு போட்டிகள் வரும், 19 ம் தேதி திருப்பூரில் நடத்தப்பட உள்ளது.


தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன், 50ம் ஆண்டு பொன் விழாவாக நடப்பாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, மாநில அளவில் தகுதி பெறுவோருக்கு பரிசுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 19ல் 100 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதில், 21 வயதை கடந்த ஆர்வமுள்ள ஆண், பெண் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்கள், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர் என, விளையாட்டுத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.