மகளிர் எறிபந்து - எத்திராஜ் கல்லுாரி அணி முதலிடம்


செல்லம்மாள் கல்லுாரியில் நடந்த, மகளிர் எறிபந்து போட்டியில், எத்தி ராஜ் அணி முதலிடம் பிடித்தது.செல்லம்மாள் மகளிர் கல்லுாரி சார்பில், வடமலை கோப்பைக்கான மகளிர் எறிபந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது. டி.ஜி., வைஷ்ணவா, செல்லம்மாள், எத்திராஜ், டபுள்யூ.சி.சி., உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த, மகளிர் அணிகள் பங்கேற்றன.இதன் அரையிறுதிப் போட்டியில், எஸ்.ஐ.இ.ஐ.டி., அணியை தோற்கடித்த எத்திராஜ் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதியில், எத்திராஜ் மற்றும் டபுள்யூ.சி.சி., அணிகள் மோதின.அதில், 16 - 14, 15 - 6 என்ற புள்ளிக் கணக்கில், எத்திராஜ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.