சர்வதேச சதுரங்கம் சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீஹரி, இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி பதக்கம்


:


சர்வதேச சதுரங்கப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீஹரி, இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.இந்திய செஸ் பள்ளி சார்பில், நான்காவது சர்வதேச சதுரங்கப் போட்டி, மும்பையில், டிச., 30 துவங்கி, நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். இதில், 13 வயதிற்குப்பட்டோருக்கான பிரிவில், இந்தியாவின் சார்பில், சென்னை, பம்மலைச் சேர்ந்த, 'மாஸ்டர் மைன்ட்' அகாடமியில், சி.நாகராஜியிடம் பயிற்சி பெற்று வரும், எல்.ஆர்.ஸ்ரீஹாரி பங்கேற்றார்.இந்த போட்டியில், எட்டு புள்ளிகள் பெற்று, ஆரியன் வர்ஷினி என்ற சிறுமி முதலிடத்தை பிடித்தார். 7.5 புள்ளிகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்த ஸ்ரீஹரி, வெள்ளிப் பதக்கம் வென்றார். 7.5 புள்ளிகள் பெற்று, மூன்றாம் இடம்பிடித்த மானிஷ், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.