1. 2018-ம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களைக் கோலி கடந்துள்ளார். காலண்டர் ஆண்டில், தொடர்ந்து 3-வது முறையாகக் கோலி 2 ஆ யிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
  2. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர்(1996-98), மேத்யூ ஹேடன்(2002-2004), ஜோய் ரூட்(2015-2017) ஆகிய 3 வீரர்கள் மட்டுமே தொடர்ந்து 3 காலண்டர் ஆண்டுகளில் 2 ஆயிரம் கடந்திருந்தனர். அந்தவரிசையில் கோலி 4-வது வீரராக இணைந்தார்.
  3. மேலும், காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் கோலி(2,005ரன்) குவிப்பது இது 5-வது முறையாகும். 2017ம் ஆண்டில் கோலி 2,818 ரன்களும், 2016-ம் ஆண்டில் 2,595 ரன்களும் சேர்த்துள்ளார்.
  4. இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா மட்டுமே இதுவரை 6 முறை காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
  5. அதுமட்டுமல்லாமல், கேப்டனாக இருந்து 2 ஆயிரம் ரன்களை தொடர்ந்து 2-வது ஆண்டாக கோலி கடந்துள்ளார். இதற்கு முன் எந்த நாட்டு அணியின்கேப்டனும் இந்த சாதனையைச் செய்தது இல்லை.
  6. இந்தப் போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 2-வதுவிக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 15-வது முறையாகும்.
  7. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் 5 முறை சேர்த்துள்ளனர். கங்குலி 4 முறையும், ராகுல் டிராவிட் 3 முறையும், சேவாக், கம்பீர் ஒரு முறையும் சேர்த்துள்ளனர்.
  8. இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 36-வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாகச் சர்வதேச அரங்கில் அவர் அடிக்கும் 60-வது சதமாகும்.