கிரிக்கெட்: டான் பாஸ்கோ சாம்பியன்


சென்னையில் நடந்த, டி.பி., - எம்.ஆர்.எப்., கிரிக்கெட் போட்டியில், டான் பாஸ்கோ பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.எழும்பூரில் உள்ளடான் பாஸ்கோ பள்ளி சார்பில், டி.பி., - எம்.ஆர்.எப்., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, பள்ளி விளையாட்டு மைதானத்தில், சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள செட்டிநாடு பள்ளி, லேடி ஆண்டாள், டான் பாஸ்கோ உட்பட, 15 பள்ளி அணிகள்பங்கேற்றன.நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி மற்றும் எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி அணிகள் மோதின.இதில் முதல் களமிறங்கிய, பீட்ஸ் அணி, 30 ஓவர்களில், ஆறு விக்கெட் இழந்து, 213 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய, டான் பாஸ்கோ அணி, 29.4 ஓவர்களில், ஆறு விக்கெட் இழந்து, 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.