பால் பேட்மின்டன் போட்டி செயின்ட் ஜோசப் சாம்பியன்    BALLBADMINTON-ST JOSEPHS WON THE TROPHY


 

மண்டல பால் பேட்மின்டன் போட்டி
செயின்ட் ஜோசப் சாம்பியன்


சென்னை,டிச. 10–
மண்டலங்களுக்கு இடையிலான, பால் பேட்மின்டன் போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தியது.


அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு துறையில் உள்ள,  மண்டலங்களுக்கான பால் பேட்மின்டன் போட்டி,  கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில், அப்பல்கலை உள்ள விளையாட்டு துறையை சேர்ந்த, 19 மண்டலங்களை சேர்ந்த, ஏராளாமான வீரர்கள் பங்கேற்றனர்.

 முதல் போட்டியில்,சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த, செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, 35  – 16, 35– 22 என்ற புள்ளியில், திருச்செங்கோடு செங்குந்தர் கல்லுாரியை தோற்கடித்து.

காலிறுதியில், செயின்ட் ஜோசப் அணி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியையும், அரையிறுதியில், ஜோசப் அணி, கிண்டி பொறியியல் கல்லுாரியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் நாமக்கல், பாவை கல்லுாரி அணிகள் மோதின. அதில், 35 – 28 , 25 – 19 என்ற புள்ளிக் கணக்கில், சென்டன செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 

 

 

Anna University Inter Zone Ball Badminton tournament Winners - St. Joseph's College of Engineering. 1st Match St. Joseph's Engg Beat Sengunther Engg, Thiruchengodu Points : 35-16, 35-22. Q-Finals St. Joseph's Engg Beat Sree Ramakrishna Engg, Coimbatore Points : 35-11, 35-19. S-Finals St. Joseph's Engg Beat College of Engg, Guindy. Points : 35-28, 35-20. Finals St. Joseph's Engg Beat Paavai College of Engg, Namakkal.