பேட்மின்டன்: எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்


மகளிர் கல்லுாரி அணிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டியில், எத்திராஜ் அணி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றது.சென்னை, டபள்யூ.சி.சி., மகளிர் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, கல்லுாரி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.இந்த போட்டியில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, எட்டு மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில், 'லீக் மற்றும் நாக் - அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில், எத்திராஜ் மற்றும் டபள்யூ.சி.சி., கல்லுாரி அணிகள் மோதின. இதில், 35- - 32, 30- - 35, 39- - 38 என்ற புள்ளிக் கணக்கில், எத்திராஜ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.