அகில இந்திய சிவில் சர்வீசஸ் கூடைப்பந்து போட்டி சென்னை மண்டல அணிசாம்பியன்


சென்னை அணி ‘சாம்பியன்’

 

சென்னையில் நடந்த அகில இந்திய சிவில் சர்வீசஸ் கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மண்டல அணிக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு கோப்பை வழங்கிய போது எடுத்தபடம். அருகில் விளையாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் சந்திரசேகர் சக்ஹமுரி ஆகியோர் உள்ளனர்.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி தங்கம் வென்றது.சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய கூடைப்பந்து போட்டி, சமீபத்தில் நடந்தது.இதில், சென்னை மண்டல விளையாட்டு வாரிய அணி, முதலிடம் பிடித்து, தங்கம் வென்றது. டில்லி மத்திய தலைமை செயலக அணி, வெள்ளி வென்றது. கொச்சின் மண்டல விளையாட்டு வாரிய அணி, வெண்கலப் பதக்கம் வென்றது.