விஐடியில் ரிவேரா-19 (RIVIERA- 19 ) 4 நாள்சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா


விஐடியில் ரிவேரா-19 (RIVIERA- 19 ) 4 நாள்சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா வரும் 14 ந் தேதி காலை இந்திய கிரிகெட் வீரர் முரளிவிஜய் தொடங்கி வைக்கிறார் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பேட்டி விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா -19 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா (RIVIERA-19 International Sports and Cultural Carnival) வரும் 14 ந் தேதி தொடங்குகிறது. இதனை அன்று காலை 10 மணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முரளிவிஜய் தொடங்கி வைக்கிறார். 17 ந் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் நடிகை சுருதி ஹாசன் பங்கேற்று பரிசுகள் வழங்க உள்ளதாக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் விஐடியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் வண்ணமயமாக வெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும் ரிவேரா என்கிற சர்வதேசஅளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா வரும் 14 தொடங்கி 17 ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உள்நாட்டிலிருந்தும் ஆசியா ,ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், வாலிபால், டென்னிஸ், தடகளம், பேஸ்கட்பால்,டென்னிஸ் கைப்பந்து மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16 விதமான விளையாட்டு போட்டிகளும் நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு ,தமிழ் ஆங்கிலம் குறும்படம் தயாரித்தல் கருத்தரங்கம் என மொத்தம் 129 நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத் தொகையாக ரூ. 20 லட்சம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்ப்படுகிறது. ரிவேரா கலை விழா தொடக்கமாக14 ந்தேதி காலை 6 மணியளவில் விஐடி மூன்றாவது நுழைவு பகுதியிலிருந்து சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்கும் 9.9 கி.மீ தூர மாரத்தன் ஒட்டம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 10 மணியளவில் விஐடி பசுமை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் ரிவேரா தொடக்க விழா வேந்தர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முரளிவிஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் சி.எஸ் அரங்கில் நடைபெறும் சைலன்ட் டிஸ்கோ என்ற நடன நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் காதில் ஹெட் போன் பொருத்திக் கொண்டு அதில் வரும் பாடலுக்கு ஏற்ப நடனமாடும் நிகழ்ச்சி நடக்கிறது. லோக்கல் டிரெயின் என்கிற நிகழ்வில் இந்தி ராக் பேன்ட் நிகழ்வும் அதனை தொடர்ந்து இந்தி ,தெலுங்கு, கன்னடம் மொழி பின்னணி பாடகர் சோனு நிகாமின் பாடல் நிகழ்வு நடைபெறுகிறது. 15 ந்தேதி இரண்டாம் நாள் காலை அண்ணா அரங்கில் நடைபெறும் எல்கேஜி தமிழ்பட புரோமேஷன் நிகழ்வில் அப்படத்தில் நடித்த நடிகர்கள் ஆர்.ஜெ.பாலாஜி யோகிபாபு நடிகை பிரியாஆனந்த் குழுவினர் பங்கேற்கின்றனர். சாகிதி என்ற தெலுங்கு நிகழ்வில் தெலுங்கு சினிமா நடிகர்கள் மஞ்சு மனோகர்கெட்டப் சீனு ஆட்டோ ராம்பிரசாத் ஆகியோர் பங்கேற்கின்றன். அன்று காலை 11மணி முதல் பிற்பகல் 1மணி வரை புட்டிஸ் பகுதியில் நடைபெறும் ஐக்கியா என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில மக்களின் கலாச்சாரம் பண்பாட்டை விளக்கும் கலை நிகழ்ச்சியை விஐடி மாணவ மாணவியர் நிகழ்த்துகின்றனர் ன். மாலை நடன இயக்குநர் ரவிவர்மா நடுவராக விளங்க மாணவ மாணவியரின் நடன நிகழ்வு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அன்று மாலை நடைபெறும் திரை இசை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆன்டிரியா ஜெர்மியா பாடகர் சத்யபிரகாஷ் ஆகியோர் பங்கேற்று திரை இசை பாடல்களை பாடுகிறார்.அதனை தொடர்ந்து இந்தி திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆயுஷ்மான் குரானாவின் பாடல் நிகழ்வு நடைபெறுகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக 16ந்தேதி திரை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து உத்தமவில்லன் வாகை சூடவா விஸ்வரூபம் பட இசையமைப்பாளர் ஜிப்ரன் நடுவராக விளங்க நடன போட்டி நடைபெறுகிறது. மேலும் இந்திய அழகி பட்டம் வென்ற பங்கேற்கும் தேஷ் மெயின் விதேஷ் என்ற நிகழ்வில் சர்வதேச அளவில் 32 நாடுகளைச்சேர்ந்த 130 மாணவ மாணவியர் பங்கேற்கும் கலாச்சார பரிவர்தனையின் கீழ் நடன நிகழ்ச்சியும் அவர்களின் பாரம்பரிய உணவு முறைகளைபற்றிய உணவு தயாரிப்பு முறைகளை இங்குள்ள பள்ளி மாணவர்கள் அறியும் வகையில் தயாரித்து காட்டுகின்றனர். இந்தாண்டு ரிவேரா நிகழ்வில் முக்கிய நிகழ்வாக தமிழ் மொழியிலான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ரோலிங் சார் என்ற தலைப்பில் தமிழ் குறும் படம் தயாரிப்பு ஒரு கதை சொல்லுங்க சார் என்ற தலைப்பில் தமிழ் கட்டுரை கவிதை மற்றும் பேச்சு போட்டியும் கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற தலைப்பில் நடனம் தெருக்கூத்து நாடக போட்டியும் ஆகியவையும் கலக்கல் கச்சேரி என்ற தலைப்பில் தமிழ் பாடல் போட்டியும் கோலிவுட் கிங் என்ற பெயரில் விணாடி விணா போட்டியும் ஆடலாம் வா சின்னதா டான்ஸ் என்ற தலைப்பில் நடனப்போட்டியும் என 7 விதமான போட்டி நிகழ்வு மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது . 17ந்தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் நடிகை சுருதிஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிவேராயொட்டி நடத்தப்படட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.