பேட்மின்டன்- சென்னை வீரர் ஜனகன், தங்கம் வென்றார்.


பஞ்சாப்பில் நடந்த தேசிய அளவிலான, தனிநபர் பேட்மின்டன் போட்டியில், சென்னை வீரர் ஜனகன், தங்கம் வென்றார்.பஞ்சாப் யூத் கேம் ஸ்போட்ஸ் சங்கம் சார்பில், 2வது இளையோருக்கான, தேசிய விளையாட்டு போட்டிகள், பஞ்சாப்பில், கடந்த, 5ல் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தன.பேட்மின்டன் போட்டியில், தமிழகம் உட்பட, எட்டு மாநிலங்களைச் சேர்ந்த, 60 வீரர்கள் பங்கேற்றனர். அதில், சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த, எம்.ஜனகன் தனிநபர் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றார்.அரையிறுதிப் போட்டியில், பஞ்சாப் வீரர், அமீர்கானை எதிர்த்து போட்டியிட்டு, 21 - 13; 21 - 15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.இறுதிப்போட்டியில், ஹிமாச்சல் வீரர், நித்தீனை, 21 - 15; 21 - 18 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, தங்கம் வென்றார்.