தங்கப்பதக்கம் வென்ற போலீசுக்கு பாராட்டு


 இந்திய அளவில் நடந்த காவல்துறை தடகள போட்டியில், தமிழக அணியில் இடம் பெற்ற, கரூர் ஆயுதப்படை போலீஸ் தங்கப் பதக்கம் வென்றார். புதுடில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், அகில இந்திய காவல் துறையினருக்கான, 67வது தடகள போட்டிகள், கடந்த, 10 முதல், 14 வரை நடந்தது. அதில், 1,600 மீட்டர் தொடர் ஒட்டப்போட்டியில், தமிழக அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த, கரூர் மாவட்ட, ஆயுதப்படை போலீஸ் துரை ராஜூக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. கரூர் எஸ்.பி., ராஜசேகரன் அவரைப் பாராட்டி பரிசு வழங்கினார்.