அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 93 பள்ளிகள் உள்பட, தமிழகம் முழுவதும், 5 ஆயிரத்து 711 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 100 மாணவிகள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகத்திற்கு உள்ளே மட்டுமே பயிற்சி வழங்க வேண்டும், பயிற்சியின் போது பெண் ஆசிரியை உடனிருக்க வேண்டும் உள்ளிட்ட  நிபந்தனைகளுடன், அடுத்த வாரம் முதல் இந்த பயிற்சிகள் தொடங்க உள்ளன.