வாலிபால் செயின்ட் ஜோசப்ஸ் சாம்பியன் ST. Joseph's volley ball women team Won the Yugam trophy 2019,


கோவை குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் நடந்தமகளிர் வாலிபால் போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி மகளிர் வாலிபால் அணியினர்

கோவைபி.எஸ். ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று யுகம் கோப்பையைக் கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற அணியினரை செயின்ட் ஜோசப்ஸ் கல்விக்குழும சேர்மன் டாக்டர் .பி.பாபு மனோகரன் பாராட்டினார்.

 

 

St. Joseph's volley ball women team Won the Yugam trophy 2019, which was held at Kumaraguru College of Technology, Coimbatore. 1st League St. Joseph's Engg Beat NGM Arts, Pollachi. Points :25-14,25-18 2nd League St. Joseph's Engg Beat Bishop Heber Arts, Trichy. . Points :25-8,18-25,25-19 3rd League St. Joseph's Engg Beat Kongu Engg. Perundurai . Points :25-15,25-15 4th League St. Joseph's Engg Beat Karupagam University.Coimbatore Points :(Walkover) Semi Finals St. Joseph's Engg Beat Karunya University,Coimbatore Points :25-17,25-18 Finals St. Joseph's Engg Beat PSGR Krishnammal Arts,Coimbatore Points :25-17,25-15

மாநில அளவிலான, பெண்கள் வாலிபால் போட்டியில், சென்னை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி, கோப்பையை வென்றது.கோவை, குமரகுரு தொழில்நுட்ப கல்லுரியில், மாநில அளவிலான, 'யுகம்' கோப்பை பெண்கள் வாலிபால் போட்டி, சமீபத்தில் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.'லீக்' முதல் போட்டியில், 25 - 14, 25 - 18 என்ற புள்ளிக்கணக்கில், பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கலைக் கல்லுாரி அணியை, சென்னை, செயின்ட் ஜோசப் அணி வீழ்த்தியது.இரண்டாவது போட்டியில், திருச்சி பிஷப் ஹேபர் கலைக் கல்லுாரி, மூன்றாவது போட்டியில், பெருத்துறை, கொங்கு பொறியியல் கல்லுாரி, நான்காவது போட்டியில், கோவை, கற்பகம் பல்கலை அணிகளை வீழ்த்தி, செயின்ட் ஜோசப் அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது.அரையிறுதியில், கோவை, காருண்யாபல்கலை அணியை, 25-17 , 25-15 புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு, செயின்ட் ஜோசப் தகுதி பெற்றது. இறுதியில், கோவை, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கலைக் கல்லுரியை, 25-17, 25-15 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, செயின்ட் ஜோசப் அணி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.