விஐடியில் மனித ஆற்றல் வாகன ரேஸ் போட்டி -வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்


விஐடியில் மனித ஆற்றல் வாகன ரேஸ் போட்டி -வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார் இயந்திரவியல் பொறியியல் மாணவர்கள் வடிவமைத்த மனித ஆற்றல் வாகன ரேஸ் போட்டியினை விஐடியில் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஐடியில் அமெரிக்கா இயந்திரவியல் பொறியாளர் சங்கத்தின் சார்பில் விஐடியில் ஆசியா பசிபிக் பொறியியல் திருவிழா சர்வதேச அளவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக மனித ஆற்றல் வாகன வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது (Human Powered Vehicle Challenge). இதில் பல்வேறு பல்கலைக்கழங்களிலிருந்து 40 மாணவர் குழுக்கள் பங்கேற்று மோட்டார் வசதி இல்லாத அதிவேக மனித ஆற்றல் மூலம் இயக்கும் வாகனங்களை உருவாக்கினர். அந்த வாகனங்களின் 150 மீட்டர் தூரம் இயக்குவதற்கான ரேஸ் போட்டி விஐடியில் நடைபெற்றது .இதில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கொடியசைத்து இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன், விஐடி இயந்திரவியல் பள்ளி டீன் டாக்டர் வாசுதேவன், பேராசிரியர்கள் டாக்டர் சேவியர், அந்தோனி, டாக்டர் ஜெய பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். .