வாலிபால்: பெரிய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்


மாநில அளவிலான பள்ளி மாணவர் வாலிபால் போட்டியில், பெரிய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.மேற்கு மாம்பலம், அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளி சார்பில், மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, அப்பள்ளியில் சமீபத்தில் நடந்தது.


இந்த போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 500 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், பெரிய பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. மேலும், அயனாபுரம், டபிள்யு.பி.ஏ.எஸ்., மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.