தென் மாநில பூப்பந்து கோவைக்கு வெள்ளி


தென் மாநில மற்றும் தேசிய பூப்பந்து போட்டியில், தமிழக அணி சார்பில் கோவை நிர்மலா கல்லுாரி மாணவியர் சக்தி, நந்தினி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.தேசிய பூப்பந்து சங்கம் சார்பில், அனைத்து மாநில பெண்களுக்கான போட்டி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜி., கல்லுாரியில் நடந்தது.தென்மாநில போட்டியில், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி அணிகளை வென்று, தமிழக அணி 2ம் இடம் பெற்றது போலவே, தேசிய போட்டியில், சத்தீஸ்கர், பீகார், ஆந்திரா அணிகளையும் வென்று, 2ம் பெற்றது.தமிழக அணியில் இடம் பெற்ற நிர்மலா கல்லுாரி மாணவியர் சக்தி, நந்தினி ஆகியோரை, கல்லுாரி முதல்வர் ஹெலன், உடற்கல்வி இயக்குனர் ஸ்ரீமதி, இறகுபந்து சங்க செயலாளர் மார்சல் வாழ்த்தினர்.