கோல் மழை பொழிந்த சென்னையின் எஃப்சி அணி….புனே அணியை வீழ்த்தி அபார வெற்றி !!
கோல் மழை பொழிந்த சென்னையின் எஃப்சி அணி….புனே அணியை வீழ்த்தி அபார வெற்றி !!

புனே, நவம்பர்  6:

புனேவில் இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி  4 – 2 என்ற கோல் கணக்கில் புனே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 30 ஆவது கால்பந்து போட்டி    புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் எஃப்சி  புனே அணிக்கும்  சென்னையின் எஃப்சி அணிக்கும்   இடையே  இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே   அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

அட்டவணையில் கடைசி இரண்டு இடங்களை பெற்றுள்ள இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக விளையாடின. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து சென்னை அணியின் மெயில்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக விளையாடின. 
சென்னை அணி கடைசி இடத்தில் இருப்பதால் எப்படியாவது கோல் அடிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக விளையாடியது.

ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் புனே அணியின் லால் சலாமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் முதல் பாதி வரை சென்னை  அணி கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 1 – 0 என்ற கோல் கணக்கில் புனே அணி முன்னிலை பெற்றிருந்தது.


ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய 54 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் மெயில்சன் ஒரு கோல் அடித்து அசத்தினார். 

முதல்  கோல் அடித்த சிறிது நேரத்தில் அதாவது 56 ஆவது நிமிடத்தில்  சென்னையின் நெல்சன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிக் வெளியேற்றப்பட்டு  எமிலினோ களம் இறங்கினார். இந்நிலையில் ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் இனிகோ ஒரு கோல் அடித்தார், இது  சென்னை அணியின் 3 ஆவது கோல் ஆகும்.

இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அற்புதம் நடந்தது. ஆம் சென்னை அணியின் தாய்சிங் ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து புனே அணியின் ஜோனத்தான் ஒரு கோல் அடித்தார்.. 

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோ பெரேரோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன அந்த கூடுதல் நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து சென்னை அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Chennaiyin recover, leave Pune down in the dumps

Pune, November 6: Defending champions Chennaiyin FC tasted victory for the first time this season with a convincing 4-2 victory against FC Pune City in their Hero Indian Super League clash at the Shree Shiv Chhatrapati Sports Complex Stadium, Pune, on Tuesday.

Ashique Kuruniyan's early goal in the ninth minute gave Pune the lead but a strong second half from Chennaiyin allowed John Gregory's men to seal three points. Mailson Alves equalised with a header in the 53rd minute and Gregory Nelson completed the comeback two minutes later. Inigo Calderon and Thoi Singh helped the visitors increase their lead and Jonathan Vila's late goal was nothing more than a consolation. 

Brazilian striker Marcelinho was given his marching orders after a dangerous tackle on Germanpreet Singh as Pune ended the game with ten men to compound interim coach Pradyum Reddy’s woes since another striker, Diego Carlos de Oliveira, also remains suspended for another red card against FC Goa.

A tentative start by the defending champions was punished by Pune City less than ten minutes into the match. An audacious cross-field diagonal ball by Robin Singh allowed Kuruniyan to race past Inigo Calderon on the left flank and beat Karanjit Singh from a tight angle inside the box. 

John Gregory's men had the lion's share of the ball but struggled to create clear-cut chances with it. The visitors were content to use the turnovers to good effect whenever they sensed an opportunity from their own half. 

Chennaiyin came out of their blocks quickly after the restart and scored the equaliser in the 53rd minute. Martin Diaz fouled Anirudh Thapa outside the box and the young midfielder picked out Mailson Alves at the far post from the resulting free-kick. The skipper's looping header hit the back of the net, leaving the goalkeeper with no chance.

The match turned on its head as the champions took the lead two minutes later. The scorer turned provider as Mailson’s long ball found Nelson on the right flank who ran in behind Lalchhuanmawia Fanai before chipping the ball over an onrushing Kamaljit Singh. 

Chennaiyin doubled their lead in the 69th minute from Thapa's corner-kick. Pune's defence failed to tackle the delivery from the corner and Raphael Augusto managed to push the ball into the path of Calderon who tapped the ball into the net.

The visitors grew in confidence as the second half progressed and scored their fourth goal three minutes later. Augusto played a delightful ball across the face of goal for Jeje whose shot was kept out by the goalkeeper. The rebound fell perfectly for Thoi who made no mistake from handshaking distance.

Augusto almost wrote his name onto the scoresheet with a dipping effort on goal but the swerving effort full of Brazilian flair hit the crossbar.

Pune grabbed a consolation goal in the 90th minute when Jonathan Vila rose the highest at the near post to head in Marcelinho's well-taken corner kick. Marcelinho, however, jumped into a dangerous tackle to steal the ball off Germanpreet Singh with just seconds left on the clock and the forward was punished with a straight red card. 

Pune are now at the bottom of the league ladder with just two points from six matches while Chennaiyin moved up to the eighth spot with four points from seven matches.