மாநில கால்பந்துப் போட்டி: பாளை.யில் இன்று வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழகத் தலைவர் கே.செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட கால்பந்துக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான 14 வயதிற்குள்பட்ட (1-1-2004 முதல் 31-12-2005 வரை பிறந்தவர்கள்) மாணவர்களுக்கான கால்பந்து தேர்வுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ளது. இப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் நெய்வேலியில் இம் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு திருநெல்வேலி கால்பந்துக் கழகம் சார்பில் அழைத்து செல்லப்படுவார்கள். தேர்வுப் போட்டியில் பங்கேற்க வருவோர் கண்டிப்பாக பிறப்புச்சான்றிதழுடன் வர வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு 94420 65716 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.