தென்மண்டல மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகு பந்து போட்டி விஐடியில் டிசம்பர் 4ல் தொடக்கம்.


தென்மண்டல மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகு பந்து போட்டி விஐடியில் டிசம்பர் 4ல் தொடக்கம். விஐடியில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தென் மண்டல பல்கலைக்கழங்களுக்கு இடையேயான மகளிர் இறகு பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 82 பல்கலைக்கழகங்களை சார்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கு பெற உள்ளன. போட்டியின் துவக்க விழா டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணியளவில் விஐடியில் நடைபெற உள்ளது. தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் முதல் 4 இடங்கள் பெறும் அணிகள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவார்கள். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் கிழக்கு, மேற்கு,வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களிலிருந்து முதல் 4 இடங்களை பெறும் அணிகள் பங்கு கொள்வார்கள். சுமார் 16 அணிகள் பங்கு கொள்ள இறகு பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இறகு பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி துவக்க விழாவும், 13ஆம் தேதி நிறைவு விழாவும் நடைபெற உள்ளதாக விஐடி வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.