ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லுாரி சார்பில் மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான, மாநில விளையாட்டு போட்டி


மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான, மாநில விளையாட்டு போட்டியில், நேற்று நடந்த நீச்சல் போட்டியில், மாணவியர் உற்சாகமாக பங்கேற்று அசத்தினர்.தேனாம்பேட்டையில் உள்ள, ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லுாரி சார்பில், ஜெபாஸ் விளையாட்டு திருவிழா, எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி வளாகத்தில், நேற்றுதுவங்கியது.இதில் வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து, கபடி, கோ - கோ, கிரிக்கெட் ஆகிய போட்டிகள், மாநில அளவில், மாணவியருக்கு மட்டும் நடத்தப்படுகிறது.இதைத் தவிர்த்து,ஆசிரியர்களுக்கு எறிபந்து, டெபிள் டென்னிஸ்மற்றும் வளையப்பந்து போட்டிகளும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, வாலிபால் மற்றும் சதுரங்க போட்டிகள்நடக்கின்றன.இந்த போட்டிகளில், சென்னை மாவட்டத்தில் உள்ள, 21 மகளிர் கல்லுாரிகளைச் சேர்ந்தோர் பங்கேற்கின்றனர்.நேற்று, மாணவியருக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஆறு கல்லுாரிகளைச் மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.மற்ற கல்லுாரிகளின் மாணவியருக்கு, அடுத்தடுத்து நீச்சல் போட்டி நடத்தப்படும்.