ஐஎஸ்எல் கால்பந்து போட்டி…. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி டிரா …


ஐஎஸ்எல் கால்பந்து போட்டி…. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி டிரா ….
 
கவுகாத்தி   டிசம்பர் 5 …
கவுகாத்தியில் பெங்களூரு – நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1- 1       என்ற கோல் கணக்கில்    டிராவில் முடிந்தது.  
 
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 49 ஆவது கால்பந்து போட்டி   கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக்  ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும்  பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. 
 
டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
 
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக விளையாடினர். புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதுவதால் ஆட்டம் கடுமையாக இருந்தது. இரு அணிகளுக்கும் பல முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை வீரர்கள் நழுவவிட்டனர். 
 
இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது.
அந்த ஒரு நிமிடத்திலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காததால் 0 – 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
 
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. இதிலும் இரண்டு அணி வீரர்களும் மிகக் கடுமையாக மோதினர். 
ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து.ஆனால் நார்த் ஈஸ் அணியில் கோல் கீப்பர் அதை தடுத்து நிறுத்தினார்.
 
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடரிகோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 
 
ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் குர்பிரீத் சிங்கிற்கு மஞ்சள் அட்டை       காண்பிக்கப்பட்டது.
 
71 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு சிறிய மாற்றம் செய்யபபட்டது. மேலும் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 77  மற்றும் 78 ஆவது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 
 
இதையடுத்து ஆட்டத்தின் 84 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியிள் ஃபெடரிகோ வெளியேற்றப்பட்டு ஜுவான் களம் இறக்கப்பட்டார்.
பின்னர் 87 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஷுகுமார் வெளியேற்றப்பட்டு கீன் லெவிஸ் களம் இறக்கப்பட்டார். 
 
ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சென்ச்நோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு – நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1- 1       என்ற கோல் கணக்கில்   டிராவில் முடிந்தது.
Brilliant Chencho preserves Bengaluru’s unbeaten run

Guwahati, November 5: Bengaluru FC’s unbeaten start to the Hero Indian Super League (ISL) remained intact after a dramatic 1-1 draw against NorthEast United FC at the Indira Gandhi Athletic Stadium here on Wednesday. 

After a tightly-contested first half, Eelco Schattorie’s side took the lead though Federico Gallego (64’) midway through the second-half. However, a late acrobatic effort from Bhutanese striker Chencho Gyeltshen ensured the Blues shared the spoils. 

The result sees Bengaluru FC preserve their four-point advantage over NorthEast United at the top of the table. 

The first chance fell for the home side when Lalthathanga Khawlring threaded a through ball for Redeem Tlang but the latter’s shot was just about kept out by an onrushing goalkeeper Gurpreet Singh Sandhu.

From the ensuing corner, Bartholomew Ogbeche, who was under pressure from Xisco Hernandez, managed to head it straight at the Bengaluru custodian.

It was a scrappy game with both teams struggling to dominate the midfield. While Pawan Kumar in goal looked shaky each time the ball was played to his feet, the visitors survived a couple of close offside calls against Ogbeche at the other end.

The first half saw two shots on target from the home side and just one for the away team.

Carles Cuadrat changed the way his side lined-up after the break with Harmanjot Khabra moving to the right-back position with Rahul Bheke on the opposite flank.

But it was NorthEast who had a chance when Ogbeche and Rowllin Borges combined with the former sending a cross into the box which was cleared by Eric Paartalu straight into the hands of the Bengaluru custodian.

The breakthrough eventually came in the 64th minute as Federico Gallego found a way past the Bengaluru defence. Ogbeche played a ball to the left when Gallego was left in a lot of space. He sidestepped Albert Serran to slot it home as the ball took a deflection off Gurpreet to find its way in.

In the 66th minute, Bengaluru couldn’t clear their lines and Gurpreet had to come off his to clear the ball. However, he fouled Ogbeche in the process and earned a yellow card. From the ensuing free-kick, Ogbeche’s effort was blocked as Bengaluru survived yet another scare.

Cuadrat immediately substituted Serran and brought in Chencho in order to bolster their attack. However, it was Schattorie’s team who looked threatening every time they ventured into the opposition half.

Bengaluru came close in the 88th minute when Khabra’s cross was chested down by Xisco for Chencho and the Bhutanese striker’s shot sailed over.

However, Chencho wasn’t going to be denied for the second time as his acrobatic kick after getting on the end of a Chhetri header helped his side find the equaliser.