Ramakant Achrekar, the man who discovered Tendulkar, passes awayநேராக விளையாடவும் நேர்மையாக வாழவும் கற்றுக் கொடுத்தவர் அச்ரேக்கர் சார்... - குருநாதர் மறைவுக்கு சச்சின் நெகிழ்ச்சி அஞ்சலி


Ramakant Achrekar, the celebrated cricket coach credited for discovering Sachin Tendulkar, died on Wednesday.

achrekar
 
Mumbai:
He was 87 and, according to a family member, had been battling old age-related ailments for the past few days.
 
"He (Archrekar Sir) is no more with us. He passed away this evening," his kin Rashmi Dalvi told PTI over phone.
 
Achrekar competed in just one first-class match in his playing career but discovered and shaped the biggest batsman in international cricket after Sir Donald Bradman in Tendulkar.
 
Tendulkar, who is now retired, owns almost all the batting records that were there for the taking in the game, including the highest runs in Tests (15,921) and ODIs (18,426).
 
Achrekar is best known for being his childhood coach and has always been acknowledged by the celebrated right-hander for the role he played in shaping his career as a child.
 
Tendulkar was coached by Achrekar at the Shivaji Park here.
 
"Sir did not say well-played to me ever, (but) I knew (when) Sir has taken me to have bhelpuri or paani-puri, Sir is happy, I have done something nice on the field," Tendulkar had said last year at an event while recalling Achrekar's contribution in making him the cricketer he became.
 
Achrekar was bestowed the Padmashri award in 2010.
 
Besides Tendulkar, he also coached some prominent players in Vinod Kambli, Pravin Amre, Sameer Dighe and Balwinder Singh Sandhu

சச்சின் டெண்டுல்கர், விநோத் காம்ப்ளி. 

சச்சின் டெண்டுல்கரின் நல்லாசிரியரும் ஆதர்சமும், கிரிக்கெட் பயிற்சியாளருமான ராமாகந்த் அச்ரேக்கர் தன் 87வது வயதில் மும்பையில் புதனன்று காலமானார்.

வயது முதிர்வு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அவர்கள் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது மாணாக்கரான சச்சின் டெண்டுல்கர் அவருக்கு அளித்த நெகிழ்ச்சி அஞ்சலியில் கூறியிருப்பதாவது:

சொர்க்கத்தில் கிரிக்கெட் அச்ரேக்கர் சாரினால் வளமை பெறும். பல மாணவர்களைப் போல் நானும் சாரின் வழிகாட்டுதலில்தான் கிரிக்கெட் ஏபிசிடி-யைக் கற்றேன்.

என் வாழ்க்கையில் அவரது பங்களிப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில்தான் நான் இன்று நிற்கிறேன்.

நான் அச்ரேக்கர் சாரை அவருடைய மாணவர்கள் சிலருடன் கடந்த மாதம்தான் சென்று பார்த்தேன். சேர்ந்து உரையாடி மகிழ்ந்தோம். நகைச்சுவையைப் பகிர்ந்து கொண்டோம் பழைய காலங்களை அசைபோட்டோம்.

நேராக விளையாடுவது நேர்மையாக வாழ்வது ஆகிய அறங்களை அச்ரேக்கர் சார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக எங்களை இணைத்துக் கொண்டதற்கும் உங்கள் பயிற்சி முறைகளில் எங்களை வளப்படுத்தியதற்கும் நன்றி. வெல் பிளேய்டு சார்...நீங்கள் எங்கு இருந்தாலும் இன்னும் பயிற்சி அளிப்பீர்கள்.

இவ்வாறு சச்சின் நெகிழ்ச்சியாக அஞ்சலி செலுத்தியுள்ளார்

 

1996ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர், ராமாகந்த் அச்ரேக்கர். 

இந்திய அணிக்கும் உலக கிரிக்கெட்டுக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை வளர்த்து உருவாக்கிக் கொடுத்த பயிற்சியாளரும் துரோணாச்சரியர் விருது பெற்றவருமான ராமாகந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

அதிய வயதானதால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே போன்ற வீரர்கள் மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர்.

சச்சின் டெண்டுல்கரை அச்ரேக்கரிடம் அறிமுகப் படுத்தியது சச்சின் சகோதரர் அஜித். சிவாஜி பார்க் மைதானத்தில் சச்சின் அச்ரேக்கரின் கீழ் தன் கிரிக்கெட் வாழ்வை உருப்படுத்திக் கொண்டார். அதிலிருந்து குரு-சிஷ்ய உறவு இருவருக்கும் இடையே உறுதியாக வளர்ந்து வந்தது.

சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது அச்ரேக்கரின் பங்கை பெரிய அளவில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது