டென்னிஸ்; அக் ஷயா முதலிடம்


தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, மாணவர்கள் பிரிவில், ஆகாஷ்; மாணவியர் பிரிவில் அக் ஷயா ஆகியோர், முதலிடத்தை தட்டி சென்றனர். அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில், தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள், சிங்காநல்லுாரில் உள்ள எஸ்.வி., டென்னிஸ் கிளப்பில் நடந்தன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ஆகாஷ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தீபக்கையும்; மாணவிகள் பிரிவில் அக் ஷயா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில், தேவகி சாயையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.