புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இடையே நடைபெற்ற போட்டி டிரா !!


புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இடையே நடைபெற்ற போட்டி டிரா !! 

புனே,  நவம்பர் 2:

புனேவில் இன்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது. 


5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 26 ஆவது கால்பந்து போட்டி  புனேவில் உள்ள ஸ்ரீசிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில்  எஃப்சி புனே சிட்டி அணிக்கும்,  கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும்  இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கேரளா அணி இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் பிரமாதமாக விளையாடின. ஆட்டத்தின்  13 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

அடுத்து ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ வெளியேறினார். அவருக்கு பதில் ஆல்வின் ஜார்ஜ் களம் இறங்கினார்.

இதையடுத்து கேரள அணியின்  சந்தேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு தரப்பு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. குறிப்பாக புனே அணியை சமன் செய்ய கேரள வீரர்கள் கடுமையாக விளையாடினர்.

ஆட்டத்தின் 42 ஆவது கேரளாவின் நிகோலா ஒரு கோல் அடித்தார். ஆனால் அது சர்ச்கைக்குரியதாக மாறியதால் நடுவர்  அந்த கோலை நிராகரித்தார். இதையடுத்து கூடுதலான 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1 – 0 என்ற கோல் கணக்கில் புனே அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. அப்போது புனே அணியின் அடில் கானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் நழுவிப் போனது.

தொடர்ந்து  ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் நிகோலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 65 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ராபின் சிங் வெளியேற்றப்பட்டு  காளிச்சரன் களம் இறங்கினார்.

ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சி.கே.வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.. 82 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டனர்.