10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து தெண்டுல்கரின் சாதனை முறியடித்தார், விராட் கோலி


10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து தெண்டுல்கரின் சாதனை முறியடித்தார், விராட் கோலி
10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த விராட் கோலி, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
 
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி செஞ்சுரி போட்டு பிரமாதப்படுத்தினார். அவர் 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது. உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 13–வது வீரர் கோலி ஆவார். அத்துடன் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
213 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி அதில் 205 இன்னிங்சில் பேட்டிங் செய்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே அதிவேகமாக இருந்தது. தெண்டுல்கர் வசம் 17 ஆண்டுகளாக இருந்த இந்த சாதனையை கோலி தட்டிப்பறித்துள்ளார். 
 
10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலி 10,813 பந்துகளை சந்தித்து இருக்கிறார். இதுவும் ஒரு சாதனை தான். இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா 11,296 பந்துகளில் இந்த ரன்களை எட்டியதே முந்தைய சிறப்பானதாக இருந்தது.
 
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதம்
 
இந்திய கேப்டன் 29 வயதான விராட் கோலி நேற்று ஒரே நாளில் ஏராளமான சாதனைகளை படைத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:–
 
* ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 37 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் பேட்டிங்கில் 3–வது வரிசையில் இறங்கி அடித்த சதங்கள் மட்டும் 30. மூன்றாவது வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் 29 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரை கோலி முந்தியுள்ளார்.
 
*கேப்டனாக கோலியின் 15–வது சதம் இதுவாகும். கேப்டன் பொறுப்பில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குக்கு (22 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.
 
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் கோலி சதம் கண்டுள்ளார். 2017–ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த ஆட்டத்தில் 111 ரன்களும், மூன்று நாட்களுக்கு முன்பு கவுகாத்தியில் நடந்த ஆட்டத்தில் 140 ரன்களும், தற்போதைய ஆட்டத்தில் 157 ரன்களும் குவித்துள்ளார். குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு வீரர் ‘ஹாட்ரிக்’ சதம் நொறுக்குவது இது 11–வது நிகழ்வாகும். கோலி மட்டும் இச்சாதனையை இரண்டு முறை செய்திருப்பது கூடுதல் சிறப்பாகும். ஏற்கனவே இலங்கைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக 3 சதங்கள் (2012–ம் ஆண்டு) அடித்துள்ளார்.
 
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கோலியின் 6–வது சதம் இதுவாகும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் என்ற மகத்தான பெருமையும் கோலியின் வசம் ஆனது. தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தலா 5 சதங்கள் எடுத்துள்ளனர்.
 
*ஒரு நாள் கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சாதனையாளராகவும் கோலி வலம் வருகிறார். அந்த அணிக்கு எதிராக கோலி 29 ஆட்டங்களில் ஆடி 6 சதம் 9 அரைசதங்கள் உள்பட 1,684 ரன் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 2–வது இடத்துக்கு (39 ஆட்டத்தில் 1,573 ரன்) தள்ளப்பட்டார்.
 
*தெண்டுல்கர் (6,976 ரன்), டோனி (4,410 ரன்) ஆகியோருக்கு அடுத்து இந்திய மண்ணில் 4 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரர்களின் வரிசையில் விராட் கோலி (4,127 ரன், 81 ஆட்டம்) நேற்று இணைந்தார்.
 
இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தும் அசத்தல்
 
* ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் ‘டெல்லி சூறாவளி’ விராட் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களையும் கடந்தார். இந்த ஆண்டில் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதம், 3 அரைசதம் உள்பட 1,046 ரன்கள் குவித்துள்ளார். 2018–ம் ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த மற்றொரு வீரர் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆவார். அவர் 22 ஆட்டத்தில் 1,025 ரன்கள் எடுத்துள்ளார்.
 
* ஒரு ஆண்டில் குறைந்த ஆட்டத்தில் (11 ஆட்டம்) ஆயிரம் ரன்களை எட்டிய வீரரும் கோலி தான். இதற்கு முன்பு இதே சாதனையை தென்ஆப்பிரிக்காவின் அம்லாவுடன் (15 ஆட்டம்) பகிர்ந்து கொண்டு இருந்தார்.
 
* ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் கோலி ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 6–வது முறையாகும். இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (7 முறை) முன்னணியில் இருக்கிறார்.
இந்த ஆண்டில் மட்டும் கோலி 5 சதங்களை சுவைத்துள்ளார். ஒரு ஆண்டில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் சதங்கள் காண்பது இது 3–வது முறையாகும். வேறு எந்த வீரரும் செய்யாத ஒரு சாதனை இதுவாகும். தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், அம்லா உள்ளிட்டோர் தலா 2 முறை இது போன்று செய்திருக்கிறார்கள்.
 
ஆட்டம்             213
 
இன்னிங்ஸ்    205
 
நாட்–அவுட்     36
 
ரன்கள்             10,076
 
சராசரி            59.62
 
சதங்கள்          37
 
அரைசதங்கள்    48
 
டக்–அவுட்       12
 
பவுண்டரி      944
 
சிக்சர்              110
Virat Kohli Wednesday became the fastest to score 10,000 runs in One-day Internationals, rewriting, fittingly enough, the iconic Sachin Tendulkar's record and compounding the cricket community's conundrum to find the right superlatives for his phenomenal batting.
     
'King' Kohli comfortably bettered the record set by the man who was to Indian cricket for over two decades what the 29-year-old has been for the past few years.
     
Tendulkar took 259 innings to get there, while Kohli has so far batted in 205 innings. Fortune, too, was on Kohli's side as West Indies skipper Jason Holder dropped his Indian counterpart on 44.
     
Seventeen summers ago, Tendulkar had ventured into what was then an unchartered territory, during a match against Australia. On Wednesday, Kohli became the 13th batsman to reach the milestone.
     
Not long ago, while the cricket world struggled to look for words to aptly describe Kohli's phenomenal batting, his coach Ravi Shastri thought it would be wise to visit the bookstore, buy the latest edition of the Oxford dictionary and look for the adjectives that befit the captain and his superhuman feats.
     
"If I were you, I would visit the bookstore and pick up the Oxford dictionary," Shastri had said after a Kohli century guided India to victory over South Africa in February.
     
Some years ago, Tendulkar, after scoring his 100th international century, said he would love to see an Indian -- someone like Kohli or Rohit Sharma -- break his records.
     
At a venue set amidst picturesque hills, Kohli reached the mark when he played Ashley Nurse for a single in the 37th over of the second ODI against the West Indies.
     
Having an enviable record at the Dr YSR ACA-VDCA Cricket Stadium with scores of 118, 117, 99 and 65, Kohli began his latest innings with a boundary through the off-side.
     
Entering the game 81 short of 10,000, with this achievement the run machine added another feather to his illustrious cap.
     
Kohli has been in sublime form across formats this year and has scored over 900 runs in ODIs alone. He is currently the world's No.1 batsman in both the Test and one-day formats.
     
Kohli's journey has been awe-inspiring, from his first-class debut, winning the U-19 World Cup, captaining the Indian team, to rewriting batting records at will.
     
With his unbeatable performances, Kohli has won several accolades including the Arjuna award, ICC World Cricketer of the year and multiple BCCI international Cricketer of the Year awards.
     
"It's an incredible achievement by Virat to complete 10,000 runs ODI before he is even 30 years old. It's only expected that Virat will reach many more batting milestones in future," BCCI acting president CK Khanna said.
     
In the first match against the Caribbean side, Kohli notched up his 36th ODI hundred as he stroked his way to a breezy 140, helping the home team take a 1-0 lead in the five-match series.
     
Besides Tendulkar and Kohli, Sourav Ganguly, Mahendra Singh Dhoni and Rahul Dravid are the other Indian cricketers to cross 10000 runs in the format.
 
 

 

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடைசி பந்தில் டை ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்திய அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவும், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒஷேன் தாமஸ் நீக்கப்பட்டு ஒபெட் மெக்காயும் சேர்க்கப்பட்டனர். 21 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான மெக்காயிக்கு இது அறிமுக ஆட்டமாக அமைந்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா விக்கெட்டை விரைவாக இழந்தது. கேமார் ரோச் பந்தை பாயின்ட் திசையில் வலுவில்லாமல் ரோஹித் சர்மா அடிக்க அது சிம்ரன் ஹெட்மையரிடம் கேட்ச் ஆனது. இதனால் 4 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேறினார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். கேமார் ரோச் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை, தேர்டுமேன் திசையில் சிக்ஸராக மாற்றினார் ஷிகர் தவண். சீராக ரன்கள் சேர்த்த அவர், ஆஷ்லே நர்ஷ் வீசிய அடுத்த ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 30 பந்துகளை சந்தித்த ஷிகர் தவண் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்தார். அப்போது ஸ்கோர் 8.4 ஓவர்களில் 40 ஆக இருந்தது.

இதையடுத்து அம்பதி ராயுடு, விராட் கோலியுடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். பவர் பிளேவில் இந்திய அணி 49 ரன்கள் எடுத்தது. தேவேந்திரா பிஷூ வீசிய 18-வது ஓவரில் விராட் கோலி, இரு புவுண்டரிகள் விரட்டினார். இந்த ஜோடி சீராக ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. விராட் கோலி 44 ரன்கள் சேர்த்திருந்த போது மெக்காய் வீசிய பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்த போது அதை கேட்ச் செய்ய ஜேசன் ஹோல்டர் தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கோலி, மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீச்சை பதம் பார்த்தார். விராட் கோலி 56 பந்துகளில், 5 பவுண்டரிகளுடனும், அம்பதி ராயுடு 61 பந்துகளில், 5 பவுண்டரிகளுடனும் அரை சதம் அடித்தனர்.

மெக்காய் வீசிய 27-வது ஓவரில் அம்பதி ராயுடு இரு பவுண்டரிகள் விளாசினார். சிறப்பாக பேட் செய்து வந்த அம்பதி ராயுடு, ஆஷ்லே நர்ஷ் வீசிய 32-வது ஓவரின் 2-வது பந்தை லாங் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது ஸ்டெம்பை பறிகொடுத்தார். 80 பந்துகளை சந்தித்த அம்பதி ராயுடு 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து அம்பதி ராயுடு 139 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தோனி களமிறங்கினார்.

ஆஷ்லே நர்ஷ் வீசிய 37-வது ஓவரின் 3-வது பந்தை லாங் ஆன் திசையில் தட்டி விட்டு விராட் கோலி ஒரு ரன் சேர்க்க, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. 29 வயதான விராட் கோலி, இந்த மைல்கல் சாதனையை 205 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தி புதிய சாதனை படைத்தார். 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 13-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

மார்லோன் சாமுவேல்ஸ் வீசிய 38-வது ஓவரில், தோனி லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார். 40 ஓவர்களில் இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. சீராக ரன்கள் சேர்த்த தோனி 25 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் மெக்காய் பந்தில் போல்டானார். இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார். மெக்காய் வீசிய 43-வது ஓவரில், ரிஷப் பந்த் இரு பவுண்டரிகளும், விராட் கோலி ஒரு பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. மார்லன் சாமுவேல்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் (17) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதே ஓவரில் விராட் கோலி கவர் திசையில் பவுண்டரி விளாசி தனது 37-வது சதத்தை அடித்தார். 106 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் விராட் கோலி இந்த சதத்தை எட்டினார். அடுத்தடுத்து இரு சதங்களை விராட் கோலி விளாசுவது இது 7-வது முறையாகும்.

மெக்காய் வீசிய 47-வது ஓவரில் விராட் கோலி, 2 சிக்ஸர்களை விளாசி மிரளச் செய்தார். கேமார் ரோச் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விராட் கோலி விளாச இந்திய அணி 300 ரன்களை கடந்தது. ஜடேஜா 14 பந்துகளில், 13 ரன்கள் எடுத்த நிலையில் மெக்காய் பந்தில் ஆட்மிழந்தார். கேமார் ரோச் வீசிய கடைசி ஓவரில் விராட் கோலி பைன் லெக் திசையில் பவுண்டரியும், லாங் ஆன் திசையில் சிக்ஸரும் விளாச 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. விராட் கோலி 129 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 157 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் மெக்காய், ஆஷ்லே நர்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து 322 ரன்கள் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களான கெய்ரன் பொவல் 18, ஹெம்ராஜ் 32, மார்லன் சாமுவேல்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 78 ரன்கள் என்ற நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்த சிம்ரன் ஹெட்மையர் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அபாரமாக விளையாடிய சிம்ரன் ஹெட்மையர், 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசிய நிலையில் யுவேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து சிம்ரன் ஹெட்மையர் 143 ரன்கள் சேர்த்தார். அவரது விக்கெட் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து களமிறங்கிய ருவன் பொவல் 18 ரன்களில் குல்தீப் பந்தில் வெளியேறினார். 40 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 259 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்து ஜேசன் ஹோல்டர் நிதானமாக பேட் செய்தார். ஜடேஜா, சாஹல், ஷமி ஆகியோர் சற்று நெருக்கடி கொடுக்க 41 முதல் 43 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் வீசிய அடுத்த ஓவரில் ஷாய் ஹோப் சிக்ஸர் விளாசினார். அபாரமாக விளையாடிய ஷாய் ஹோப் 113 பந்துகளில், சதம் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் (12) ரன் அவுட்டானார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. சாஹல் வீசிய இந்த ஓவரில் 2 ரன்களே சேர்க்கப்பட்டது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் 6 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதனால் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தில் ஆஷ்லே நர்ஷ் (5) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹோப் 2 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹோப் பவுண்டரி விளாச ஆட்டம் டை ஆனது. 50 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்தது. ஷாய் ஹோப் 134 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 123 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதுவும் விராட் வசம்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 39 இன்னிங்ஸ்களில் 1573 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி 1684 ரன்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.பாண்டிங் சாதனையும் காலி

3-வது வீரராக களமிறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 3-வது வீரராக களமிறங்கி 29 சதங்கள் அடித்திருந்தார். இந்த சதங்களை அவர், 330 இன்னிங்ஸ்களில் அடித்திருந்தார். தற்போது விராட் கோலி 154 இன்னிங்ஸ்களில் 30 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.11 இன்னிங்ஸில் ஆயிரம்

ஒரே ஆண்டில் விரைவாக ஆயிரம் ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தினார். இந்த ஆண்டில் அவர், 11 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா கடந்த 2010-ம் ஆண்டு 15 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை 2012-ம் ஆண்டு விராட் கோலி சமன் செய்த நிலையில் தற்போது அதனை முறியடித்துள்ளார்