ஜூனியர் சூப்பர் கிங்ஸ்டி20 கிரிக்கெட்:செயின்ட் பீட்ஸ், மதுரை லீ சேட்லியர் அணிகள் வெற்றிSt Bede’s scores thumping win


ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை செயின்ட் பீட்ஸ், மதுரை லீ சேட்லியர் அணிகள் வெற்றி கண்டன.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்டப் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை செயின்ட் பீட்ஸ் அணி 151 ரன்கள் வித்தியாசத் தில் சேலம் நீலாம்பாள் சுப்பிர மணியம் எச்எஸ்எஸ் பள்ளி அணியை வென்றது.

முதலில் விளையாடிய செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய நீலாம் பாள் சுப்பிரமணியம் அணி 10.2 ஓவர் களில் 43 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மற்றொரு ஆட்டத்தில் கோவை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி எம்எச்எஸ் எஸ் அணி முதலில் விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களம்புகுந்த திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

3-வது ஆட்டத்தில் சென்னை சாந்தோம் எச்எஸ்எஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வேலூர் கன்கார்டியா எச்எஸ்எஸ் அணியைத் தோற்கடித்தது.

முதலில் விளையாடிய சாந்தோம் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்களைக் குவித்தது.

பின்னர் விளையாடிய வேலூர் கன்கார்டியா பள்ளி அணி 20 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.

4-வது ஆட்டத்தில் மதுரை லீ சேட்லியர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி ரங்கம் பாய்ஸ் எச்எஸ்எஸ் அணியைச் சாய்த்தது.

முதலில் களமிறங்கிய ஸ்ரீரங்கம் பாய்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களைக் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளை யாடிய மதுரை லீ சேட்லியர் அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

 

St Bede’s scores thumping win