எஸ்.ஆர்.எம் தூய்மை இந்தியா கோடை கால பயிற்சிSRM-Swachh Bharat Summer Internship 2018


     எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்வேறு கல்வி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தூய்மை இந்தியா கோடை கால பயிற்சி 2018” திட்டத்தின் கீழ் காஞ்சி;புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை தேர்வு செய்து தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, எஸ்.ஆர்.எம் மருந்தாக்கியல் கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் காஞ்சி;புரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர்  யூனியனுக்குட்ப்டட “குருவன்மேடு” கிராமத்தில் கடந்த 27.06.2018 முதல்  11.07.2018 வரை “தூய்மை இந்தியா பயிற்சி” மேற்கொண்டு வந்தனர் 

பயிற்சியின் போது கிழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன

1. வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்துதல்.

2. வீதிகள் சுத்தப்பணி

3. குப்பையை முடிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. திறந்தவெளி கழிப்பிடம் தடுத்தல்.

5. தூய்மை இந்தியா குறித்த சுவர் ஒவியம் வரைதல்.

6. மரம் நடுதல்.

7. மருத்துவ முகாம் நடத்துதல்.

8. தூய்மை இந்தியா குறித்து குழந்தைகளுக்கிடையில் போட்டி 

      நடத்தியது

9. உள்@ர் நூலக கட்டிடத்தின் உள்புரம் மற்றும் சுற்றுப்புறத்தை 

      தூய்மை செய்தது.

கிராமப் பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தினர். 

இத்திட்டத்தின் நிறைவு விழா 11.07.2018 புதன்கிழமை குருவன்மேடு கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வண்டலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு,எம்.எஸ்.எம்.வல்லவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  நிகழ்ச்சியின் நடுவில் குழந்தைகளிடம் இப்பயிற்சி முலம் தெரிந்து கொண்ட விவரங்கள் குறித்து வினவி விபரம் தெரிந்து கொண்டார்.  குழந்தைகள் விடுதோறும் தனி கழிவறை அமைத்தல் மற்றும் திறந்த வெளி கழிப்பிடம் தடுப்பு ஆகிய விபரங்களை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர்.  குழந்தைகள் பெற்ற விழிப்புணர்வைத் தொடர்ந்து பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் பேராசிரியை லட்சுமி மற்றும் துணை முதல்வர் பேராசிரியை சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் மற்றும் தூய்மை இந்தியா பயிற்சி திட்டம் நோடல் ஆபிசர் திரு.வ.திருமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றினார்.

பார்மசி 5ம் ஆண்டு மாணவி செல்வி.சுவேதா வரவேற்புரை ஆற்றினார். பார்மசி 5ம் ஆண்டு மாணவி செல்வி. ஸ்ரீதர்சினி நன்றி தெரிவித்தார்.  

                                                                           

 


SRM Institute of Science and Technology has been actively involving in the “Swachh Bharat Summer Internship 2018” for the past two months and students from all streams of this institution took part in the project in many villages of Kanchipuram Districts.

The  students of SRM Pharmacy college has organized “Swachh Bharat Internship Programme “in KURUVANMEDU village of Kattankulathur Union from 27/06/2018 and actively participated in the Swachh activities every day.

The activities include:

1. Door to door canvassing

2. Street cleaning

3. Awareness campaign on waste disposal

4. Rally to maintain ODF village

5. Wall paintings to promote Swachh plans

6. Tree planting activities

7. Conducting medical camp

8. Competition among school children for SWACHH BHARAT

9. Cleaning the local library building surrounding

They also guided the village people to maintain hygiene and cleanliness. The valedictory function of the above programmed was held today (11.07.2018) in the above Village.

 

 

 

 

Thiru, M.S.M. Vallavan, DSP Vandalur was the chief Guest and spoken about the importance of the projects and the effective involvement of students. He enquired the school children what they learnt from the Programme. The children informed that they learnt about ODF and separate toilet for each home. The Guest was happy over the reach of Swachh among children, which would also reach their parents.

Mr.V.Thirumurugan, Associate Director (cl) of SRM Institute of Science & Technology and Nodal Officer for Swachh Bharat Summer Internship 2018 gave special address.

Prof.K.S.Lakshmi,Dean, SRM Pharmacy College and Prof.V.Chitra ,Vice Principal of SRM pharmacy College felicitated the function.

Ms.D.Swetha (5th Yr-Pharm) welcomed the gathering and Ms.Sridharshini (5th Yr -Pharm) proposed vote of thanks