பெண்கள் பேட்மின்டன் - எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வீராங்கனையர் வெற்றி


தேசிய பெண்கள் பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வீராங்கனையர் வெற்றி பெற்றனர்.புதுச்சேரி, ஜவஹர்லால் கல்லுாரி சார்பில், தேசிய பெண்கள் பேட்மின்டன் போட்டி, ஆக., 29ல் துவங்கி, 31ம் தேதி வரை, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், இந்திய அளவில்பல்வேறு மாநிலங்களில்இருந்து, 25 மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில், சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியை சேர்ந்த,

ஸ்ரீ சந்தனா, 21-15, 21-10 புள்ளிக் கணக்கில், ஜவஹர்லால் கல்லுாரியைச் சேர்ந்த, ஜெய்சியை தோற்கடித்தார். இரட்டையர் பிரிவில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவியர் ஸ்ரீசந்தனா, மதுமிதா ஆகியோர், ஜெய்சி, டில்லேஷ்வரியை வீழ்த்தினர்.சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது, ஸ்ரீ சந்தனாவுக்கு வழங்கப்பட்டது.