கோல் மழை பொழிந்த ஜாம்ஷெட்பூர் அணி… கோவா அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றி….


கோல் மழை பொழிந்த ஜாம்ஷெட்பூர் அணி… கோவா அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றி….
 
ஜாம்ஷெட்பூர்,  நவம்பர் 1:
 
ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 25 ஆவது கால்பந்து போட்டி  ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாட்டா  ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில்  ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும்,  எஃப்சி கோவா அணிக்கும்  இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. ஜாம்ஷெட்பூர் அணி டாஸ் வென்று இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
 
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டி கடுமையாக இருந்தது. ஆட்டத்தின்  17 ஆவது நிமிடத்தில்  ஜாம்ஷெட்பூரின் மைக்கேல் சூசைராஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். இதையடுத்து ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில்  கோவா அணியின் மார்ட்டடா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
 
இதனைத் தொடர்ந்து  இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் வீரர்கள் தவறவிட்டனர். பின்னர் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.
அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவிலலை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணியும், கோவா அணியும் 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
 
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் அதாவது 50 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு அற்புதமான கோல் அடித்தார். 
 
57 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கௌரவ் வெளியேற்றப்பட்டு அவருக்குப் பதில் ஸ்மீத் பாசி களம் இறங்கினார். அவர் இறங்கிய 2 நிமிடத்தில்  மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் மற்றும் கோவா அணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டம் விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த நிலையில் 77ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மீமோ ஒரு கோல் அடித்து அசத்தினார். இது அந்த அணியின் மூன்றாவது கோல் ஆகும்.
 
இதையடுத்து உடனடியாக 78 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்மீத் பாசி  ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு தரப்பிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.
 
பின்னர் ஆட்டத்தில் கூடுதலான 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால்  4 – 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி , கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Jamshedpur give Goa a taste of their own medicine
 
Jamshedpur, November 1: Jamshedpur FC broke their run of four successive draws in the Hero Indian Super League (ISL) 2018 with a stunning 4-1 demolition of FC Goa at the JRD Tata Sports Complex here on Thursday.
 
Michael Soosairaj’s brace (17’ and 50’) along with goals from Memo (77’) and Sumeet Passi (78’) saw Jamshedpur hand Goa their first defeat in the league and climb to third spot on the table. Mourtada Fall’s 33rd-minute equaliser for the Gaurs went in vain as Goa’s defence was found wanting.
 
Having lost the prolific striker Ferran Corominas to a suspension, Sergio Lobera started with Miguel Palanca up top, while Cesar Ferrando made five changes to his Jamshedpur starting XI from the 2-2 draw with Kerala Blasters.
 
The hosts were lightning quick off the blocks with young Gaurav Mukhi forcing Mohammad Nawaz into an excellent save as early as the second minute. The young Goa custodian made an even better one a minute later from Sergio Cidoncha’s well-struck free-kick.
 
The hosts’ early pressure paid off in the 17th minute with Soosairaj calmly slotting the ball into the net after Goa failed to clear a Cidoncha corner.
 
Goa failed to threaten a dominant Jamshedpur until the 26th minute when Hugo Boumous struck the woodwork with a fierce low shot.
 
A few minutes later, the visitors equalised against the run of play through Fall’s header after Edu Bedia had flicked on a Boumous free-kick. The hosts should have gone into the break with their noses in front but Memo blasted his shot high and wide after he had peeled away at the far post from a Cidoncha free-kick.
 
Ferrando’s men did have their deserved lead four minutes into the second half with Soosairaj bagging his second. The 24-year-old made no mistake after he was released behind the Goa defence by Cidoncha following a quick breakaway.
 
A horrible Lenny Rodrigues back pass almost gifted the hosts another goal before Tiri came close with a header. At the other end, Bedia threatened with a couple of long-distance attempts with the hosts remaining in the ascendancy.
 
A belter of a Memo strike from just outside the box after Goa failed to deal with a corner in the 77th minute sealed three points for Ferrando’s men. Passi added gloss to the scoreline just a minute later after he tapped into an empty net following a layoff from fellow substitute Carlos Calvo.