சர்வதேச டார்கெட் பால் சென்னை வீரர் பங்கேற்பு


சென்னை:பூட்டான் நாட்டில் நடக்க உள்ள சர்வதேச டார்கெட் பால் சாம்பியன் போட்டியில், இந்திய அணி சார்பில், சென்னையைச் சேர்ந்த வீரர்பங்கேற்க உள்ளார்.

பூட்டான் டார்கெட் பால் கூட்டமைப்பு மற்றும் ஆசிய டார்கெட் பால் கூட்டமைப்பு இணைந்து, பூட்டான், பன்ட்ஷோலிங் நகரில், சர்வதேச டார்கெட் பால் சாம்பியன் போட்டி, இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடத்த உள்ளது.

இந்தியா மற்றும் பூட்டான் நாட்டின், டார்கெட் பால் அணிகள் மோத உள்ளன. அவர்களில், பராட்டியா டார்கெட் பால் சங்கம் சார்பில், இந்திய அணிக்கு, 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த, எஸ்.சரண், 17, என்பவரும் பங்கேற்க உள்ளார்.

இந்திய அளவில் இப்போட்டியில், தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் பங்கேற்பது

குறிப்பிடத்தக்கது.