டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் தங்கம் வெல்வதுதான் எனது அடுத்த இலக்கு - இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்


பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை டூட்டி சந்த் கவுரவிக்கப்பட்டார். உடன் இந்திய பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி, இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி. சுனில் உள்ளனர்.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் தங்கம் வெல்வதுதான் எனது அடுத்த இலக்கு என்று இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் கூறினார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களைக் கைப் பற்றினேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. இந்த ஆண்டு எனக்கு வெற்றிகரமான ஆண்டாக உள்ளது. ஆசிய விளை யாட்டில் 2 பதக்கம் வென்றதன் மூலம், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளேன்.

தற்போது இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் அனை வரின் கவனமும் அடுத்த ஒலிம் பிக் போட்டி மீது உள்ளது. ஜப் பானின் டோக்கியோவில் 2020-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி யில் பதக்கம் வெல்லவேண்டும் என்பது எனது ஆசை. இதற்காகத் தீவிரமாக பயிற்சி எடுத்து வரு கிறேன். விளையாட்டில் நான் மேன் மேலும் சாதனைகளைப் படைக்க உறுதுணையாக இருந்து வரும் நான் படித்த கேஐஐடி கல்வி நிறுவனத்துக்கும், அதன் நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கும் எனது நன்றி.

ஒலிம்பிக் போட்டிக்குத் தயா ராகும் விதத்தில் மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சகமும் உதவி செய்து வருகிறது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், விளையாட்டு வீரர்களுக்கு அதிக உதவி கள் செய்து வருகிறார். தீவிரப் பயிற்சியாலும், விடா முயற் சியாலும் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த இலக்கை நோக்கி நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2017-ல் புவனேஸ்வரில் நடை பெற்ற ஆசிய தடகளப் போட்டியில் டூட்டி சந்த் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.