3 தங்கம் வென்ற புதுவை மாணவி ஆஷிகாவுக்கு சிறப்பான வரவேற்பு


சர்வதேச வலுதூக்கும் போட்டி யில் சப்-ஜூனியர் பிரிவில் இந்தியா வுக்காக முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள புதுச்சேரி மாணவி ஆஷிகாவுக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி ஐயங்குட்டிபாளை யத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - சீதா தம்பதியின் மகளான ஆஷிகா (14) தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை ஆறுமுகம் உழவர்கரை நகராட்சியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக ஓய்வு நேரத்தில் கராத்தே பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும், ஆஷிகாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்.

பல்வேறு போட்டிகளில் பங் கேற்ற ஆஷிகா, கடந்த 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில், சர்வதேச வலு தூக்கும் சம்மேளனம் சார்பில் 40 நாடுகள் பங்கேற்ற போட்டியில் சப்-ஜுனியர் பிரிவில், 43 கிலோ எடைப் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து புதுச்சேரி திரும்பிய ஆஷிகாவை அவரது பெற்றோர், பயிற்சியாளர்கள், உறவினர்கள் அவருடன் பயிலும் சக மாணவர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளித் தனர். ஆஷிகாவை ஒரு மினி வேனில் ஏற்றி புதுச்சேரி நகர் முழுவதும் வலம் வந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஆஷிகா கூறும் போது, "எனது தந்தையின் ஊக்கத் தாலும், விடா முயற்சியாலும் 3 தங்கப் பதக்கங்களை வென்றேன். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டதை வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

43 ஆண்டில் பதக்கம் இல்லை

மாணவியின் பயிற்சியாளரும், இந்திய வலுதூக்கும் சம்மேளன பயிற்சியாளருமான பிரவீண் குமார் கூறும்போது, "இந்திய வலுதூக்கும் சம்மேளனம் 1975-ல் தொடங்கப்பட் டது. கடந்த 43 ஆண்டுகளில் சர்வ தேச அளவில் நடைபெற்ற வலுதூக் கும் போட்டிகளில் இதுவரை இந்தியா ஒரு தங்கம் கூட வென்ற தில்லை. தற்போது ஆஷிகாதான் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் முதன்முதலாக இந்தியாவுக்கு தங்கம் வாங்கி நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்" என்றார்.

ஆஷிகாவின் தாய் சீதா கூறும் போது, "ஆஷிகா ஆப்பிரிக்கா சென்று சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு அரசு சார்பில் எந்தவித உதவியும் செய்ய வில்லை. திறமை வாய்ந்தவர்களை அரசு கண்டறிந்து, முறையான பயிற்சியளித்து சர்வதேச போட்டி களில் பங்கேற்க உதவ வேண்டும்" என்றார்.