செஸ் போட்டி: மகாலிங்கம் கல்லூரி அணி முதலிடம்


பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவியர், அண்ணா பல்கலை செஸ் போட்டியில் முதலிடம் பெற்றனர்.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், அண்ணா பல்கலை மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள் நேற்று நடந்தது.ஆண்களுக்கான போட்டியில், 12 கல்லுாரிகள் பங்கேற்றன. ஐந்து சுற்றுகளாக போட்டிகள் நடந்தது. கோவை கிருஷ்ணா கல்லுாரி அணி, ஒன்பது புள்ளிகள் பெற்று முதலிடமும், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி அணி, எட்டு புள்ளிகள் பெற்று இரண்டாமும், கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி அணி, ஏழு புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றன. பெண்களுக்கான போட்டியில், ஒன்பது கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டிகள், நான்கு சுற்றுகளாக நடந்தன.பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரி அணி, ஏழு புள்ளிகள் பெற்று முதலிடமும், கோவை ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடமும், கோவை எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணி மூன்றாமிடமும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ரத்தினவேலு, பரிசுகளை வழங்கினார். கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் சபரிகிரி நன்றி கூறினார். கல்லுாரி செயலர் ராமசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.