தேசிய வாலிபால்: தங்கம் வென்ற தமிழகம்


தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற, தமிழக மாணவியருக்கு, பள்ளிக்கல்வித் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான வாலிபால் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில், சமீபத்தில் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட, 28 மாநிலங்களைச் சேர்ந்த, மொத்தம், 300 மாணவியர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த, 12 மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ஹிமாச்சல பிரதேச அணியை, 3:0 செட் கணக்கில் வீழ்த்தி, தமிழக அணியானது வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.வெற்றி பெற்று தமிழகம் வந்த மாணவியர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகளை, நேற்று முன்தினம் சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து பெற்றனர்.