தேசிய தடகளம் : விஸ்ருதா சாதனை


இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.டி.எப்.ஐ.,) சார்பில் நடந்த, தேசிய அளவிலான தடகள போட்டியில் விஸ்ருதா, புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.எஸ்.டி.எப்.ஐ., சார்பில், 64வது 'நேஷனல் ஸ்கூல் கேம்ஸ்' அனைத்து பள்ளி மாணவர்களுக்கான, தேசிய அளவிலான தடகள போட்டி, வாரம் டில்லியில் நடந்தது.பல்வேறு மாநிலங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணியில், கோவை நீலம்பூர், ஜி.ஆர்.டி.,- சி.பி.எப்., பள்ளியில் படிக்கும் விஸ்ருதா பங்கேற்றார். இவர், 17 வயதுக்குட்பட்ட, 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், 01.02.79 நிமிடத்தில் பந்தய துாரத்தை கடந்து புதிய சாதனை படைத்தார்.