ஜன. 7, 8ல் பள்ளி மாணவிகளுக்கு சென்னையில் மாநில தடகளம்


எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி ஜன.7, 8 தேதிகளில் சென்னையில் நடைபெறும்.  சென்னை நேரு விளையாட்டரங்களில் நடைபெற உள்ள இந்த போட்டியில் 9, 10ம் வகுப்பு மாணவிகள் சீனியர் பிரிவிலும், 11, 12ம் வகுப்பு மாணவிகள் சூப்பர் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்த 2 பிரிவுகளிலும்  100, 200, 400, 1500, 3000 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4X100 தொடர் ஓட்டம் ஆகிய  போட்டிகள் நடைபெற உள்ளன.
 
 
ஒரு பள்ளியில் இருந்து தொடர் ஓட்டத்திற்கு ஒரு குழுவும், மற்ற போட்டிகளுக்கு 2 மாணவிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.  போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் டிச.31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பின்போது அடையாள அட்டை, பள்ளியின் அனுமதி சான்று ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். போட்டிகளில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பதிவு செய்ய: எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி  உடற்கல்வி இயக்குநர் அமுதா - 98407 37407 மற்றும் ஒருங்கிணைப்பாளர் அம்சா - 73587 22355.