இறகுப்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு


இறகுப்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு


திண்டுக்கல்லில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற 10 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2 லட்சத்துக்கான பரிசுத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில இளையோர் தரவரிசைக்கான இறகுப்பந்து போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 5 பிரிவுகளில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, ரூ.2 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன், கால்பந்து கழகத்தலைவர் கோ.சுந்தராஜன், செயலர் எஸ்.சண்முகம், மாவட்ட ஹாக்கி கழகத் தலைவர் என்.எம்.பி.காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.