பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடம்


சிவகங்கையில் நடந்த, மாநில பால் பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடம் பிடித்தது.சிவகங்கை மாவட்டம், இலயாங்குடி பகுதியில், மல்லிப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில பால் பேட்மின்டன் போட்டி, ஜூலை, 7ல் துவங்கி, 8ம் தேதி வரை நடந்தது.

சென்னையைச் சேர்ந்த, எஸ்.ஆர்.எம்., பல்கலை உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, தமிழக போலீஸ், ரயில்வே மற்றும் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

'லீக்' மற்றும் 'நாக் -அவுட்' முறையில், போட்டிகள் நடந்தன. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, தர்மபுரி தொரை பைவ்ஸ் அணியை, 2-1 செட் கணக்கில் தோற்கடித்தது.

இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஏ.ஆர்., கல்லுாரி அணியை, 35 - 20, 35 - 25 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, எஸ்.ஆர்.எம்., முதலிடம்பிடித்தது.