உலக கேரம் போட்டி- தமிழக வீரருக்கு 2 வெள்ளி பதக்கம்


தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 38 வயதான கே.சகாயபாரதி, அணி கள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் அவர், 4-வது இடத்தில் உள்ளார்.

ஓபன் டபுள்ஸ் இறுதிப் போட்டியில் சகாயபாரதி, ஜாகீர் பாஷா ஜோடி சகநாட்டைச் சேர்ந்த ரியாஸ் அக்பர் அலி, பிரசாந்த் மோரே ஜோடியிடம் 25-4, 5-25, 13-25 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அணிகள் பிரிவில் சகாய பாரதி, பிரசாந்த் மோரே, ஜாகீர் பாஷா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1-2 என்ற கணக்கில் இலங்கையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இதில் ஜாகீர் பாஷா முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் சகாயபாரதி, பிரசாந்த் மோரே ஆகியோர் வெற்றியை வசப்படுத்