மாநில இளையோர் தடகளம்: 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வசந்த், ஹேமலதா முதலிடம்


 

 

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2-வது மாநில இளையோர் (18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெல்லை வீரர் சதீஷ்குமாரும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் அருண் கிருஷ்ணாவும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் அரவிந்தும், வட்டு எறிதலில் நெல்லை வீரர் குமாரும் முதலிடத்தை பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் ஜாய் அலெக்சும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோவை தடகள கிளப் வீரர் ஆதித்யனும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் அசத்துல்லாவும், குண்டு எறிதலில் செயின்ட் ஜோசப்ஸ் வீரர் செல்வ கணேசும், வட்டு எறிதலில் டெல்டா தடகள கிளப் வீரர் சுரேஷ்குமாரும், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. வீரர் வசந்தும் முதலிடத்தை கைப்பற்றினார்கள்.

பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை ஜெயா பெனிஷாவும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை கோப்பெரும் தேவியும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் வீராங் கனை ஐஸ்வர்யாவும், குண்டு எறிதலில் கோல்டு குயஸ்ட் வீராங்கனை இலக்யாவும் முதலிடத்தை தனதாக்கினார்கள்.