சென்னையின் எஃபி அணிய வீழ்த்தியது பெங்களூர எஃபிசி அணி




பெங்களூருவில் இன்று நடந்த 5-வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு எஃப்சி அணி.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 2 ஆவது போட்டியில் பெங்களூரு எஃப்சி அணியும்சென்னையின் எஃப்சி அணியும் மோதின. பெங்களூரு காண்டீரவா ஸ்டேடியத்தில் மாலை 7.30 க்கு போட்டி தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்தே பெங்களூரு அணியினர் மிகச் சிறப்பாக விளையாடினர். பல முறை அவர்கள் கோல் அடிக்க முயன்றனர்.  6 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ரஃபேல் அகஸ்டோ கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் 10  நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு சென்னை அணியின் கைக்குள் வந்தது. 

தொடர்ந்து ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்திலும், 32 ஆவது நிமிடத்திலும் சென்னை அணியினருக்கு கோல் அடிக்க  நல்ல வாய்ப்பு கிடைத்தபோதும் அதை நழுவ விட்டனர். இரண்டாவது முறை பெங்களூரு அணியின் கோல் கீப்பர்பந்தை அற்புதமாக தடுத்து கோல் விழுகாமல் காப்பாற்றினார்.

கடுமையான ஆட்டத்தின் இடையே 35 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஹார்மஞ்சோட் காப்ராவுக்கு மஞ்சள் நிற அட்டை வழங்கப்பட்டது. 41 ஆவது நிமிடத்தில்  பெங்களூரு அணியின் மீக்கு அற்புதமாக ஆடி முதல் கோலை போட்டார்.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றது

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் சென்னை அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.

ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெல்சன் பந்தை கொண்டு சென்ற போது கோல் கீப்பர் குர்பீரீத் அதை தடுத்து நிறுத்தினார். 57 ஆவது நிமிடத்தில் சென்னையின் ஜெர்ரிக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. 59 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஐசக்கிற்கு பதிலாக அனிருத் தப்பா களமிறக்கப்பட்டார்.

இதே போன்று  பெங்களூரு அணியில் இருந்து எக்ஸிஸ்கோ ஃபெர்னான்டஸ் வெளியேற்றப்பட்டு செஞ்ச்சோ களமிறக்கப்பட்டார். தொடர்ந்து சென்னை அணி கோல் போடுவதற்கு பெரும் முயற்சி எடுத்து. இறுதியில் சென்னை அணிக்கு கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மீக்கு வெளியேற்றபட்டு செம்போய் களமிறங்கினார்.

ஒவ்வொரு முறையும் சென்னை அணி பந்தை கொண்டு சென்று கோல் அடிக்க முயன்றபோதெல்லாம் பெங்களூரு கீப்பர் குர்பீரீத் அதைத் தடுத்து அந்த அணியை அரண்போல் இருந்து  காத்தார்.

ஆட்டம் இறுதிவரை  சென்னை அணி கோல்  அடிக்க முடியாததால் 1- 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.