அகில இந்திய அளவிலான 46வது ஏ கிரேடு கபடிப் போட்டி இம்மாதம் 15ம் தேதி திருச்செங்கோட்டில் தொடங்குகிறது


அகில இந்திய அளவிலான 46வது ஏ கிரேடு கபடிப் போட்டி இம்மாதம் 15ம் தேதி திருச்செங்கோட்டில் தொடங்குகிறது. திருச்செங்கோடு  விளையாட்டுக் கழகமும், தைப்பொங்கல் விழா குழுவும் இணை ந்து நடத்தும் இந்த தொடரில் ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். திருச்செங்கோடு  அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி திடலில் 18ம் தேதி வரை  போட்டிகள் நடைபெற உள்ளன. சாம்பியன் பட்டம் பெறும் ஆண்கள் அணிக்கு 2 லட்சம், மகளிர் அணிக்கு 1.5 லட்சம் பரிசாக வழங்கப்படும். 2ம் இடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு 1.5 லட்சம், பெண்கள் அணிக்கு 1 லட்சம் கிடைக்கும். இவை தவிர 3ம் இடம் பெறும் அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரித் தொகை வழங்கப்பட உள்ளது.