பெண்கள் நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்


சென்னையில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்பு, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் முழுக்க பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண்களுக்கு அதிக முக்கியத் துவம் அளித்து, அவர்களை மேம் படுத்தும் விதமாக, பெண்களை முன்னிறுத்தி ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களை செயல் படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படை யில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங் களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய பணிகள் முழுவதிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப் படுவார்கள்.

நிலையத்தில் அறிவிப்பு செய்வது, டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த புதிய நடைமுறை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 31-ம் தேதியும் (நேற்று), கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 1-ம் தேதியும் (இன்று) அமல்படுத்தப்படுகிறது.