நிதி சேவை தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை இந்தியன் வங்கி பெற்றது.


நபார்டு வங்கி நடத்தும் 2019-20-ம் ஆண்டிற்கான மாநில வங்கி கடன் நிதி கருத்தரங்கு, உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிதி சேவை தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் எம்.கே.பட்டாச்சாரியா, பொது மேலாளர் டி.தேவராஜ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.

 

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன், நபார்டு வங்கி பொது மேலாளர் டி.ரமேஷ், இந்திய ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கே.பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆர்.சுப்பிரமணிய குமார், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா, நபார்டு வங்கி சென்னை துணை பொது மேலாளர் வி.மஷார், சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் எஸ்.விஜயலட்சுமி, பல்லவன் கிராம வங்கி தலைவர் தன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.