ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி போதிக்கும் நோக்கத்தில் நடமாடும் நூலகத்தை நடத்துகிறார்கள்.


மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த நூலகம் இயங்குகிறது. அன்று 8 முதல் 11 வயது நிரம்பியர்கள் ஒன்று சேர்ந்து வீதிவீதியாக புத்தகங்களுடன் வலம்வருகி றார்கள். மூங்கில் கம்புகளுக்கு இடையே கயிற்றில் புத்தகங்களை தொங்கவிட்டும், கல்வி விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை ஏந்திக்கொண்டும் கோஷமிட்டு செல்கிறார்கள். எழு தப்படிக்க தெரியாத நிலையில் இருப்பவர் களுக்கு வாசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.

இந்த மலைக்கிராமத்தின் பெயர், ஒலியா. இது புவனேஸ்வரில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது. அங்கு 1000 பேர் வசிக் கிறார்கள். மாணவ-மாணவிகளின் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்களும் ஊக்கமளித்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்கு பயன்படும் புத்தகங்களை வாசிக்க வழங்குகிறார்கள். மேலும் புத்தகங்களை சேகரிப்பதற்காக மாணவ- மாணவிகள் சார்பில் நூலக கமிட்டி ஒன்றும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த நூலக கமிட்டியுடன் கலந்துரையாடி புத்தகங்களை சேகரிக்கிறார்கள்.

இந்த நடமாடும் நூலகம் மூலம் கிராம மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து ள்ளது. பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் இந்த கிராமத் திற்கு வந்து புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்கள்.