வுரிவாக்கம் பிரின்ஸ்  வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரி தேசிய பயிலரங்கம்


சென்னை அடுத்த கவுரிவாக்கம் பிரின்ஸ்  வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரியின் வணிகத் துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு, பாதுகாப்பு குறித்த 2 நாள் தேசிய பயிலரங்கம் நடந்தது. பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் டாக்டர் கே.வாசுதேவன், துணைத் தலைவர் டாக்டர் வா.விஷ்ணுகார்த்திக், கல்லூரி முதல்வர் எம்.உமா, டெல்லி நுகர்வோர் ஆய்வு மைய தலைமை பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா, உதவி பேராசிரியர் மம்தா பதானியா பங்கேற்றனர். நிறைவுநாள் நிகழ்ச்சியில், சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்து முதலிடம் பெற்ற நியூ பிரின்ஸ்  பவானி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வி.விஷால், ஜஸ்லின் சுபிட்சா உள்ளிட்டோருக்கு தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை துணை செயலர் வி.பி.ஜெயசீலன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். கல்லூரி வணிகத் துறை தலைவர் ஜெ.சலோமி பாக்கியஜோதி, உதவி பேராசிரியர் ஜெ.ஜானகி, கல்லூரி நிர்வாகிகள் கே.பார்த்தசாரதி, எ.என். சிவப்பிரகாசம், எம். தருமன், டாக்டர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்