எலும்பு, மூட்டு நலம் குறித்த கண்காட்சி


சென்னை, வடபழனி, காமராஜ் பல்நோக்கு மருத்துவமனை சார்பில், எலும்பு, மூட்டு நலம் குறித்த கண்காட்சி மற்றும் இலவச ஆலோசனை முகாம் துவங்கியது. கண்காட்சியை இந்திய முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மருத்துவர் காமராஜ், நிவேதிதா மற்றும் மருத்துவர் ராதாகிருஷ்ணன்.

எலும்பு, மூட்டுகளை பாதுகாப்பதில்
அதீத அக்கறை செலுத்த வேண்டும்
கண்காட்சியை திறந்துவைத்து பத்மஸ்ரீ ஷானிவில்சன் பேச்சு
சென்னை, ஆக.5
எலும்பு, மூட்டுகளை பாதுகாப்பதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் அதீத அக்கறை செலுத்தவேண்டும் என முன்னாள் சர்வதேச அத்லடிக் வீராங்கனை ஷைனி வில்சன் கூறினார்.
தேசிய எலும்பு, மூட்டு நல தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர்- காமராஜ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உள்ள சர்வதேச ஆர்த்தோ & ட்ராமா கேர் சார்பில் விழி¢ப்புணர்வு கண்காட்சி நடத்தப்படுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை முன்னாள் சர்வதேச அத்லடிக் வீராங்கனையும், 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவரும், அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவருமான ஷைனிவில்சன் துவக்கிவைத்தார். கண்காட்சியில் எலும்புகள், மூட்டுகள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை பார்வையிட்டு அது தொடர்பாக சில சந்தேகங்களை கேட்டபோது டாக்டர்கள் பி. ராதாகிருஷ்ணன், டி.காமராஜ் ஆகியோர் விளக்கினர். பின்னர் டாக்டர்கள் ஷைனிவில்சனுக்கு எலும்பில் கனிமச்சத்து அளவை (பி.எம்.டி.டெஸ்ட்) பரிசோதனை செய்தனர்.
அதன்பிறகு ஷைனிவில்சன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது--
பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த கண்காட்சியை திறந்துவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் பொதுவாக நமது உடல்நலனில் அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்வதில். ஆனால் அப்படி இருக்காமல் அதில் கவனம்செலுத்தவேண்டும். அதிலும் குறிப்பாக எலும்புகள், மூட்டுகள் மீது அதீத அக்கறை செலுத்தவேண்டும். ஒரு சிறு காயம்கூட பெரிய அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே, இதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது இயல்புதான். இதனை உடனுக்குடன் சரிசெய்துவிட வேண்டும். 
நான் போட்டிகளில் பங்கேற்ற காலங்களில் இவ்வளவு நவீன மருத்துவவசதிகள் கிடையாது. ஆனால், இன்றைய நவீன மருத்துவசதிகள் இளம் தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். 
இவ்வாறு ஷைனிவில்சன் கூறினார்.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் வரும் பிரச்சனைகள் என்ன? சாலைகளில் அல்லது வீடு, பணியிடங்களில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது நிலைதவறி விழுந்து விபத்து ஏற்பட்டாலோ செய்யவேண்டிய முதலுதவிகள் என்னென்ன?
எலும்பில் ஏற்படும் வலிகளை போக்கும் வழிகள் என்ன? மது அருந்துவதால் எலும்புகளில் ஏற்படு¢ம் பிரச்சனைகள் என்ன?
குளிரூட்டப்பட்ட அறையில் தொடர்ந்து வேலைசெய்வதால் வரும் பிரச்சனைகள் என்ன?
வயதானவர்கள் விழுந்து எலும்பு முறிவு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? போன்ற பல்வேறு காரணங்களுக்கெல்லாம் விடை கொடுக்கிறது இந்த விழிப்புணர்வு கண்காட்சி.