செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நோக்கியா தொழில்நுட்ப நாள்


நோக்கியா தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தை ஒட்டி பொறியியல் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையே சென்னையில் செயற்கை நுண்ணறிவு போட்டி நடைபெற்றது. அதில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பி.கோகுல பிரசாத், ஜி.ஹரிணி ப்ரியா, இ.காட்வின், வி.ஜோயல் ஆகியோர் அடங்கிய குழு முதலிடம் பெற்று ரூ.20 ஆயிரம் பரிசை தட்டிச் சென்றது. இவர்களுக்கு பேராசிரியர்கள் பி.எழிலரசி, எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.